ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் 11 ஆம் திகதியிட்ட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது முகங்களை துணிகளால் மூடிக்கொண்டு வந்தவர்களே கைகளினால் தாக்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளையும் கிழித்து வீசியுள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்ட காரர்கள் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் செயற்பாடாகும்.
ஆகையால் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
December 16, 2013
Rating:
Reviewed by Author
on
December 16, 2013
Rating:

No comments:
Post a Comment