பாரதியின் சிந்தனைகள் சமூக இருப்புப் பற்றிய உணர்வை விதைப்பதற்கு துணை செய்கின்றன. யாழ். தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர்.
பாரதியின் சிந்தனைகள் இன்றும் எம் சமூகத்தை உயிர்ப்புடன் வாழச் செய்வதற்கும் சமூக
இருப்புப் பற்றிய உணர்வை விதைப்பதற்கும் துணை செய்கின்றன என்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவரும் கல்வியியற் பேராசிரியருமாகிய மா . சின்னத்தம்பி தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் தமிழ்ச் சங்கத்திற்கான இணையத்தளத் தொடக்க நிகழ்வும் பாரதியின் பிறந்த தின நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் . பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றன .
இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் போதே பேராசிரியர் மா . சின்னத்தம்பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவர் உரையாற்றியதாவது ,
எமது தொன்மை , அதன் செழுமை , அதன் பேராற்றல் , அதன் வலிமை குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் . இன்று இளையோர் பல நூற்றுக்கணக்கில் இவ்வரங்கில் கூடியிருக்கின்றனர் . இவர்களிடையே தமிழ் பற்றிய பற்றும் உணர்வும் ஏற்படுவதற்கு பாரதி விழா துணை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .
வரவேற்புரையை இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் , தொடக்கவுரையை தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி . வேல்நம்பியும் வாழ்த்துரையைத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் வழங்கினர் .
விழாவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடக்கி வைக்கப்பட்டது . இணையத்தளத்தைத் துணைவேந்தர் தொடக்கி வைக்க அறிமுகவுரையை மருத்துவபீடப் பதிவாளர் இ . சர்வேஸ்வரா வழங்கியுள்ளார் .
யார் பாரதி ? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ் . சிவலிங்கராஜாவின் சிறப்புரை , இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் நடனத்துறையைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய புதுமைப் பெண்கள் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் பார்த்தோரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் மிகச் சிறப்பாக மேடையேறியுள்ளது .
யாழ் . வளரும் முன்னணிக் கலைஞர்கள் பல்வகையான பக்கவாத்தியங்களுடன் இணைந்து வழங்கிய நல்லதோர் வீணை என்ற பொருளில் அமைந்த பாரதி பாடல்களால் ஓர் இசை அர்ச்சனை நிகழ்வும் உணர்வு பூர்வமானதாக இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இணைப்பாளர் பா . பாலகணேசன் நன்றியுரை நிகழ்த்தியதுடன் , தமிழ்ச் சங்கப் பொருளாளர் ச . லலீசன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளார் .
நிகழ்வில் நல்லதோர் வீணை என்ற பெயரில் இடம்பெற்ற இசையரங்கில் பாரதியின் பாடல்களை விஸ்வப்பிரசன்ன சர்மா , ஆதித்தியா அருணகிரிநாதன் , தயாபரன் , மதுசிகன் , விஸ்வசுந்தர் , அமிர்தசிந்துஜன் , பிரசாந்தி நந்தகுமார் , சிவநயனி , சிவசங்கரி ஆகியோர் பாடினர் .
கீபோட் - சிவநாதன் ரஜீவன் , வயலின் - ப சியாமகிருஸ்ணா , மிருதங்கம் - . நந்தகுமார் , தபேலா - ஜெனில் சங்கர் , தமறின் - சசீவன் ஆகியோர் இசைத்தனர் . இந்நிகழ்வுகளை மருத்துவபீடப் பதிவாளர் இ . சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார் .
தொடர்ந்து புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் இடம்பெற்றது . இதில் யாழ் . பல்கலைக்கழக நடனத்துறையைச் சேர்ந்த முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் வருட மாணவர்கள் 40 பேர் வரையில் கலந்து கொண்டனர் .
நடன நிகழ்வுக்கான நட்டுவாங்கத்தை நடனத்துறை தலைவர் அருட்செல்வி கிருபராஜ் மேற்கொண்டிருந்தார் . குரலிசையை இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஸ்ரீ . தர்ஸனனும் விரிவுரையாளர் ஹம்சத்வனியும் வழங்கினர் .
இந்நிகழ்வில் மிருதங்கம் விரிவுரையாளர் கஜன் , தபேலா - விரிவுரையாளர் விமல்சங்கர் , வயலின் - வித்துவான் அ ஜெயராமன் , கீபோர்ட் - . பிரசாத் ஆகியோர் இணைந்து இசை வழங்கினர் . நிகழ்வு களில் நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் , யாழ் . தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக்குழுச் செயலர் அருட்பணி எஸ் . ஜெயசேகரம் அடிகள் , யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பீடாதிபதிகள் , பேராசிரியர்கள் , தமிழ் ஆர்வலர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .
பாரதியின் சிந்தனைகள் சமூக இருப்புப் பற்றிய உணர்வை விதைப்பதற்கு துணை செய்கின்றன. யாழ். தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர்.
Reviewed by Admin
on
December 16, 2013
Rating:
Reviewed by Admin
on
December 16, 2013
Rating:


No comments:
Post a Comment