அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கடலில் பிதிர்கடன் நிறைவேற்ற சென்ற குடும்பஸ்தரை காணவில்லை


உறவினர் ஒருவரின் பிதிர்கடனை நிறைவேற்ற கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலின் சுழியால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. 



 முல்லைத்தீவு, இரண்டாம் வட்டாரம் திம்பிலிப் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுப்பிரமணியம் தவசீலன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

 உறவினரின் பிதிர்கடனை நிறைவேற்றுவதற்காக கடலில் இறங்கிய வேளை வேகமாக வந்த கடல் சுழியால் குறித்த நபர் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தம்மால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு கடலில் பிதிர்கடன் நிறைவேற்ற சென்ற குடும்பஸ்தரை காணவில்லை Reviewed by Admin on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.