அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு ஏன்? தமிழக அரசிடம் நீதிமன்று கேள்வி

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு சட்டத்தரணிக்கு மதுரை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சார்பில் மதுரை உச்ச நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் உலக தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சை மாவட்டம் விளார்சாலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. 

நெடுஞ்சாலைத்துறை இடத்தில் முள்ளிவாய்க்கல் முற்றத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது என கூறி அது இடிக்கப்பட்டது. இது தேவையற்றது. 

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும். அதனை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முள்ளிவாய்க்கால் முற்றத்தை பார்க்க பொதுமக்களுக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுதாகரன், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கை வருகிற 19ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு ஏன்? தமிழக அரசிடம் நீதிமன்று கேள்வி Reviewed by Author on December 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.