சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: ஹக்கீம்
நீதவான் நீதிமன்றங்களிலும் மேல் நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தனியான நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த நான்கு வருடங்களில் பால்ய நெறி பிறழ்வு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2427 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2009 இல் 497 வழக்குகளும் 2010 இல் 483 வழக்குகளும் 2011 இல் 617 வழக்குகளும் 2012 இல் 830 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
2009 இல் 168 பேரும் 2010 இல் 273 பேரும் 2011 இல் 76 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த நான்கு வருடங்களில் பால்ய நெறி பிறழ்வு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2427 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2009 இல் 497 வழக்குகளும் 2010 இல் 483 வழக்குகளும் 2011 இல் 617 வழக்குகளும் 2012 இல் 830 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
2009 இல் 168 பேரும் 2010 இல் 273 பேரும் 2011 இல் 76 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: ஹக்கீம்
Reviewed by Author
on
December 18, 2013
Rating:
Reviewed by Author
on
December 18, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment