அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தலைவர்கள் புடைசூழ நெல்சன் மட்டேலாவின் உடல் நல்லடக்கம்

தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 5ஆம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார். 

கோசா பழங்குடியின மரபுகளின்படி, நாட்டின் கிழக்கு கேப் மாகாணத்தில் மண்டேலா சிறு வயதில் வாழ்ந்த கூனு பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது நல்லடக்கம் நடைபெற்றது. 

நல்லடக்க நிகழ்வில், மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை போற்றும் வகையிலான பாடல்கள் இசைக்கப்பட்டு, கவிதைகள் வாசிக்கப்பட்டன. 

முன்னதாக, அரச மரியாதையுடன் கூடிய இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

தென்னாப்ரிக்காவில் வெள்ளையின- சிறுபான்மை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அங்கு பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் நெல்சன் மண்டேலா என்று அவருக்கு புகழாரங்கள் சூட்டப்பட்டன. 

அவருடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக கடந்த 11ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் 91 நாடுகளைச் சேர்ந்த இராஜ தந்திரிகள் கலந்து கொண்டமை சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது. 

1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா, நெல்சன் ரோபிசலா மண்டேலா என்ற இயற் பெயரைக் கொண்டவர். 

இவர் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர். 

தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். 

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 

1990இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். 

அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. 

இன வெறிக்கு எதிராக மண்டெலா தனது 21வது வயதில் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். 

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. அவரின் வின்னி டெல்லிக்கு சென்ற அந்த விருதைப் பெற்றார். 1990இல் இந்தியாவின் ´பாரத ரத்னா´ விருதும் வழங்கப்பட்டது. 

1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவரை கௌரவிக்கும் முகமாக தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

மண்டேலா 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார். 

ஓர் இன விடுதலையைப் பெற்றுத் தந்த பிதாவென்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையொன்று நாளை தென்னாபிரிக்கா யூனியன் கட்டட சதுக்கத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
உலகத் தலைவர்கள் புடைசூழ நெல்சன் மட்டேலாவின் உடல் நல்லடக்கம் Reviewed by Author on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.