விசேட அமைச்சரவைக்கூட்டம் இன்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
அரசாங்கம் முகம் கொடுத்துள்ள நெருக்கடியான பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கே இந்த விசேட அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான விஜயங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் நடத்தப்படும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்தின் போது பிரதமர் தி.மு.ஜயரட்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் வரவு-செலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டுவருவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பிலும் முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் கன்னி வரவு-செலவுத்திட்டம் எதிர்க்கட்சித்தலைவர் இன்றியே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் போயா தினத்தன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது இதுவே முதல்முறையாகும்.
அத்துடன், ஆளும் கட்சியின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.

Reviewed by Author
on
December 16, 2013
Rating:
Reviewed by Author
on
December 16, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment