அண்மைய செய்திகள்

recent
-

உருகிடவா இசை வெளியீட்டு விழா -படங்கள்


உருகிடவா இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5:;30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் தமிழ்ச் சங்கம் மற்றும் மன்னார் சர்வமத பேரவை ஆகியவற்றின் தலைவருமான தமிழ் நேசன் அடிகளாரின் தலைமையில் குறித்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
குறித்த உருகிடவா இசை இறுவெட்டினை செல்வி சிந்துஜா உருவாக்கியுள்ளார். அழகிய வரிகளுடன் உருவாக்கப்பட்ட இசை தொகுப்பு இன்று வைபவரீதியாக மன்னாரில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த இசை வெளியீட்டு விழா சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும் வெளியீட்டுவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண அமைச்சர் பா.n;டனிஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினராக பாராளுமன்றஉறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோதரலிங்கம்,இளைப்பாறிய மன்னார் கோட்டைக்கல்வி அதிகாரி யூட் பிகராடோ ,டாக்ரர் லோகநாதன்,எந்திரி ராமகிருஸ்ணன்,மக்கள் வங்கியின் அதிகாரி டெனி ,சித்திவிநாயகர் அதிபர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதன் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு அதீதிகள் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இசை இறுவெட்டினை வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வைபவரீதியாக வெளியீட்டுவைத்தார்.
இதன்போது முதல்பிரதியிளை தமிழ் நேசன் அடிகளர் அமைச்சருக்கு வழங்கிவைத்தார். அதனை தொடர்ந்து இறுவெட்டுக்கள் அதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.  
அதனை தொடர்ந்து சிந்துஜாவினால் இருவெட்டுகள் சிறப்பு பிரமுகர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.






































































உருகிடவா இசை வெளியீட்டு விழா -படங்கள் Reviewed by Author on December 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.