மன்னார் மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் தலைமையிலான குழுவினர் பூநொச்சிக்குளம் கிராம உத்தயோகத்தர் பிரிவில் மக்களின் பிரச்சினை இனம் கண்டனர் - படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிக்குளம்.பண்டாரவெளி.மேத்தன்வெளி.அரிப்பு மேற்கு அரிப்பு கிழக்கு மற்றும் சவேரியார்புரம் போன்ற 6 கிராமசேவகர் பிரிவில் 2014-03-20 ஆம் திகதி மக்களின் அடிப்படை பிரச்சினையினை இனம்கானும் நோக்கோடு ஆறு குழுக்களாக பிரிந்து கிராம உத்தயோகத்தர் பிரிவிற்கு சென்றார்கள் அந்த வகையில் மன்னார் மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் எஸ்.சசிதரன் தலைமையிலான குழுவினர் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு வருகை தந்தார்.அதனை நினைவு கூறும் முகமாக மணற்குளம் கிராம அபிவிருத்தி கட்டத்தில் தென்னங்கன்றுகள் நடப்பட்டன.
அதை தொடர்ந்து மக்களிக் தேவை இனம்காணும் நோக்கோடு பூநொச்சிக்குளம் கிராம உத்தயோகத்தர் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.வாஜித். கிராம உத்தியோகத்தர் றவ்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பஸ்மினா ஆகியோரின் நெறிப்படுத்தலின் ஊடாக வீடு வீடாக குழுவினர் சென்று மக்களின் பிரச்சினை மற்றும் அவர்களின் தேவைப்பாடுகளையும் அவர்களின் சுய தொழிலை விருத்தி செய்து கொள்ள சமுத்தியின் ஊடாக மானியங்கள் மற்றும் கடன்களை பெற்று கொள்ளுமாறு ஆலோசனைகளையும் முன்மொழிந்தார்.
கிராம மட்ட உத்தியோகத்தர்களின் செயற்பாட்டினையும் பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.
எஸ்.எச்.எம்.வாஜித்.
மன்னார் மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் தலைமையிலான குழுவினர் பூநொச்சிக்குளம் கிராம உத்தயோகத்தர் பிரிவில் மக்களின் பிரச்சினை இனம் கண்டனர் - படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment