பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை
இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதியொன்றுக்கு தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற மலேசிய உயர் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பொங் கொங் மெங் (58 வயது) மற்றும் அவரது மனைவி தியொஹ் சிங் யென் (56 வயது) ஆகியோரே தம்மிடம் 3 வருடங்களாக பணியாற்றிய மேற்படி இந்தோனேசிய பெண்ணான இஸ்ரி கோமாரியஹ்ஹை (26 வயது) அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் பட்டினியால் வாடவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேற்படி தம்பதியிடம் பணியாற்ற ஆரம்பித்த போது 46 கிலோகிராமாக இஸ்ரியின் நிறை, அவர் இறக்கும் போது 26 கிலோகிராமாக இருந்துள்ளது.
அத்துடன் அவரது முதுகு, கைகள் மற்றும் நெற்றியில் சிராய்ப்புக் காயங்களும் காணப்பட்டுள்ளன
பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment