தாய்லாந்து கடற் பகுதியில் மிதப்பது மாயமான விமானத்தின் பாகங்களா?
இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் சுமார் 300 பாகங்கள் தமது செயற்கை கோளில் பதிவாகியுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 122 பொருட்கள் இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் மிதப்பதாக பிரான்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த தகவல் வெளியானதன் பின்னரே இந்த துகள்கள் கடந்த 24 ஆம் திகதி தமது செயற்கைகோளில் பதிவாகியுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
2 மீற்றரிலிருந்து 15 மீட்டர் நீளமுள்ள பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாகவும், ஆனால் அவை அனைத்தும் விமானத்தின் பாகங்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாது எனவும் தாய்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னும் 11 நாட்களுக்குள் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயாத்தில் நடைபெறும் விமானத்தின் தேடுதல் நடவடிக்கை சீரற்ற காலநிலையினால் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து கடற் பகுதியில் மிதப்பது மாயமான விமானத்தின் பாகங்களா?
Reviewed by NEWMANNAR
on
March 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 28, 2014
Rating:
.jpg)



No comments:
Post a Comment