வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது!
வவுனியாவில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நான்கு பேரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு, வவுனியா ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், வவுனியா நகர் பகுதிக்கு சென்றவேளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மனைவி மகேஸ்வரி மற்றும் பிள்ளைகளான பாரதிக்கண்ணன் (வயது 8), கண்ணன் (வயது 6) ஆகியோரையும் கைது செய்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வவுனியாவின் ஆச்சிபுரம் கிராமம் இராணுவத்தினரால் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்திலிருந்து வுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவத்தினரின் சேதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, வீடு வீடாக தேடுதல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது!
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:

No comments:
Post a Comment