சர்வதேசே அரங்கில் இலங்கையை பெருமைப்படுத்திய 10 வயதான மாணவன்!
சர்வதேச மேசை பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள அண்மைய 11 வயதுக்குட்பட்ட ஆடவர் மேசைப் பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் கல்கிஸை செயிண்ட் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் தாவி சமரவீர (Taavi Samaraweera) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை புதிய மைல்கல்
அதேநேரம் 10 வயதான தாவி சமரவீர, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக தரவரிசையில் 11 ஆவது இடத்தில் உள்ளார்.
அவரது விரைவான வளர்ச்சி அவரை உலக மேசை பந்தாட்டத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளையோர் உலக தரவரிசைப் போட்டியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தாவி இந்த நிலையினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 31, 2025
Rating:


No comments:
Post a Comment