வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் தற்கொலை!
வெள்வளத்தைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
“எனது மரணத்திற்கு எவரும் காரணமில்லை.
நான் தற்கொலை செய்து கொள்கின்றேன்” எனத் கடிதம் எழுதி வைத்து குறித்த இளம் பொறியியலாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான ராஜ்பிரதீபன் என்ற பொறியியலாளரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் தோல்வியே இந்த மரணத்திற்கான காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் தற்கொலை!
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:
No comments:
Post a Comment