தேசிய கீதம் சிங்கள தமிழ் மொழிகளில் இசைக்கப்பட வேண்டும் : ஜே.வி.பி.
தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் இசைக்கப்பட வெண்டுமென ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் பாட வேண்டுமென்பதனை கொள்கை அடிப்படையில் தமது கட்சி ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தேசிய கீதத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு பாடசாலை அச்சுப் புத்தகங்களில் உள்ளடக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என ஏன் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பையும் கௌரவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெரியாத மொழியொன்றில் தேசிய கீதத்தை பாடுவதனால் எவ்வாவறு அன்பையும் கௌரவத்தையம் கட்டியெழுப்ப முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கீதம் சிங்கள தமிழ் மொழிகளில் இசைக்கப்பட வேண்டும் : ஜே.வி.பி.
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment