அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் சமய பிணக்கு தொடர்பில் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகரின் கருத்திட்கு ஹுனைஸ் பாரூக் எம்.பி மறுப்பு....

கடந்த மார்ச் 19ம் திகதி நாளிதல் ஒன்றுக்கு பொலீஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகன வெளியிட்ட முஸ்லிம் மத பிணக்குகளை புத்த சாசன அமைச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற கருத்து தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தொரிவிக்கையில் வக்பு சட்ட யாப்பின் படி இந்த அதிகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குரியது என்றார்.

மேலும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவிக்கையில் இறுதியாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற புத்த சாசன மத அமைச்சுக்கான குழு கூட்டத்தில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதம அமைச்சரும் புத்த சாசன மத விவகார அமைச்சருமான டி.மு.ஜயரட்னவிடம் வேண்டுகோள் விடுத்தேன். 

இதன் பிறகு முஸ்லிம்களுக்குள் எழுகின்ற பள்ளிவாசல்களுக்கிடையிலான பிரச்சினைகள், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கிடையிலான பிரச்சினைகள் போன்ற வற்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உள்ள  வக்பு பிரிவு, வக்பு சபை, வக்பு நியாய மன்றம் இதன் மூலம் சமரச தீர்வுகளைக் கொண்டு வரவேண்டும் இதற்கு மாற்றமாக நேரடியாக பொலீஸ் தணைக்ககளமோ, ஏனைய நீதிமன்றங்களோ தலையிடக் கூடாது என்ற வேண்டுகோளை நான்  விடுத்தேன்  அத்தோடு மஸ்ஜித்களில் நடைபெறும் நிர்வாகத் தெரிவுகளுக்கு கட்டாயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோத்தர் ஒருவராவது பிரசன்னமாயிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டேன் இதற்கு பதிலளித்த பிரதம அமைச்சர் புத்தசாசன மத அலுவல்கள் செயளாலரிடமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவள்கள் திணைக்கள பணிப்பாளரிடமும்  இதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூகினால் முன்வைக்கப் பட்ட வேண்டுகோளை நடைமுறைப்படுத்துமாறு கட்டளையிட்டார். 

மேலும் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமாக பாராளுமன்றத்தில் 1956ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட வக்பு சட்ட யாப்பு இருக்கின்றது. எனவே இந்த சட்ட யாப்பின் படி முஸ்லிம்களின் மத ஸ்தாபனங்கள், வக்பு சொத்துக்கள், வக்பு நம்பிக்கை நிதியங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதும் பரிபாலனத்தைச் சரிவர நெறிப்படுத்துவதும் முஸ்லிம் சமய பன்பாட்டலுவள்கள் திணைக்களத்தின் கடமையும் பெறுப்புமாக இருப்பதால்  இதை செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது இதனையும் மிக விரைவில் பெற்றுத் தருமாறு பிரதம அமைச்சரிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம அமைச்சர் புத்த சாசன மத விவகார அமைச்சின் செயளாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். என்பதையும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.


றிப்கான் கே சமான்.

முஸ்லிம் சமய பிணக்கு தொடர்பில் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகரின் கருத்திட்கு ஹுனைஸ் பாரூக் எம்.பி மறுப்பு.... Reviewed by NEWMANNAR on March 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.