368,000 ரூபாவாக அதிகரித்த தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது.
இன்று (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கையில் இன்று (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்க விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்டது.
அதேநேரம், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இது நேற்றைய தினம் 356,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 27, 2025
Rating:


No comments:
Post a Comment