இலங்கையில் 18-24 வயதுக்குட்பட்ட 696571 பேர் பேஸ் புக் பாவனையாளர்கள்
18 வயதிற்கும் 24 வயதிற்குமிடைப்பட்ட 696,571 இலங்கையர்கள் பேஸ்புக் பாவனையாளர்களாகவுள்ளதாக இலங்கையின் இணையத்தள பாவனை தொடர்பாக ஆய்வு செய்யும் இலங்கை ஆய்வு முன்னேற்ற நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம்.
இலங்கையில், 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். இது இலங்கையின் சனத்தொகையில் 6.48 வீதமாகவுள்ளது. மொத்த இணையத்தள பாவனையாளர்களின்; வீதத்தில் 78.5 வீதமாகவுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14 வீதத்தினர் இணையத்தள பாவனையாளர்களாகவுள்ளனர். 18 வயதிற்கும் 24 வயதிற்குமிடைப்பட்ட 696,571 இலங்கையர் பேஸ்புக் பாவனையாளர்களாகவுள்ளதுடன். இவர்களில் 68 வீதமானோர் ஆண்களாவும் 32 வீதமானோர் பெண்களாகவும் உள்ளதாக தரவுகள் குறிப்படுகிறது.
இவற்றுடன் 78 வீதமான கட்டிளமைப் பருவத்தினர்; நாளொன்றுக்கு சராசரி 46 நிமிடங்களை பேஸ்புக் சமூக ஊடகப் பாவனைக்காகச் செலவு செய்கின்றனர். 78 வீதமான இளைஞர்களில் 27 வீதமானோர் நாளொன்றுக்கு 91 முதல் 120 நிமிடங்கள் வரை இந்த பேஸ்புக்கில் புதைந்து கிடப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவர்களில் 13 முதல் 25 வரையிலான வயதுடையவர்களே அதிகளவு நேரத்தை பேஸ்புக் சமூக ஊடகப் பாவனைக்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக் பாவனை தொடர்பாக சர்வதேச ஆய்வுகள் தரும் தரவுகளின் பிரகாரம், உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு மாதமும் 1.23 பில்லியன் பேரும் தினமும் 757 மில்லியன் பேரும் பேஸ்புக்கைப் பயன்படுத்துக்கின்றனா.; உலகியுள்ள 14 பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவராகவுள்ளார்.
தினமும் பேஸ்புக்குடன் இணைந்திருப்பதற்காக ஒருவர் சராசரி 20 நிமிடங்களை செலவு செய்கிறார். சராசரியாக 250 பில்லியன் நிழற்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம்; செய்யப்பட்டுள்ளதுடன் 350 மில்லியன் ; நிழற்படங்கள் தினமும் பதிவேற்றம்; செய்யப்படுகிறது. அவற்றுடன் நாளாந்தம் பேஸ்புக்கினூடாக 10 பில்லியன் தகவல்கள் பரிமாறப்படுவதாக ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் 128 மி;ல்லியன் பாவனையாளர்களும் பிரித்தானியவில் 24 மில்லியன் பாவனையாளர்களும் ஆசியா நாடுகளில் 350 மில்லியன் மக்களும் தினமும் பேஸ்புக்குடன் இணைந்திருக்கின்றனர். 150 மில்லியன் நண்பர்கள் தங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறுவதற்காக பேஸ்புக் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் ‘டுடே இந்தியா’ எனும் இணையத்தளத்தின் இம்மாதம் 15ஆம் திகதிய தகவல் ஒன்றின்; பிரகாரம் பேஸ்புக் பிறந்த மண்ணான அமெரிக்க மக்கள் இச்சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதிலும் பார்க்க, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மக்கள் இதனைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. எகிப்து, பிலிப்பைன்ஸ் உட்பட 14 நாடுகளில் பேஸ்புக் பயன்பாடு அமெரிக்க மக்களின் நாளாந்த பயன்பாட்டை விட அதிகரித்திருப்பதாக இவ்விணையத்தளம் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 18-24 வயதுக்குட்பட்ட 696571 பேர் பேஸ் புக் பாவனையாளர்கள்
Reviewed by NEWMANNAR
on
March 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 02, 2014
Rating:


No comments:
Post a Comment