மன்னார் பள்ளிமுனையில் குடி நீர்விநியோகத்திட்டம் ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது
உலக நீர் தினத்தையொட்டி மன்னார் தேசிய நீர் வழங்கல்மற்றும் வடிகாலமைப்புச் சபை மன்னார் பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம்,49 வீட்டுத்திட்டம்,50 வீட்டுத்திட்டம் மற்றும் கோந்தைப்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு குடி நீர் இணைப்புக்களை இன்று வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்.இதன்மூலம் 150 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
ஆரம்ப நிகழ்வின் போது மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுகர்னராஜா ஆகியோர் கலந்து கொண்டு குடி நீர் இணைப்பை வழங்கி வைத்தனர்.
மன்னார் பள்ளிமுனையில் குடி நீர்விநியோகத்திட்டம் ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:
No comments:
Post a Comment