மாட்டு வண்டிகளில் மன்னார் மடு தேவாலயத்துக்கு செல்லும் பக்தர்கள் - படங்கள்
முன்னைய காலங்களில் மடு தேவாலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மாட்டுவண்டிகளில் பயணித்ததைப் மேற்கொள்ளுவது போன்று நாத்தாண்டி, மாவில மற்றும் கட்டுனேரி பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 10 பேர் மடு தேவாலயத்திற்கான பயணத்தை 04 மாட்டு வண்டிகளில் செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பித்துள்ள நிலையில், புதன்கிழமை (26) சிலாபம் நகரை வந்தடைந்துள்ளனர்.
'எமது நண்பர்கள் சிலர் மாட்டுவண்டிகளில் மடு தேவாலயத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டனர். இந்நிலையில், இப்பயணத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தனர் .
புத்தளம், நொச்சியாகம, ஓயாமடு, செட்டிகுளம், மடு வீதி ஊடாக மடு தோவாலயத்திற்குச் செல்லுவதற்கு உத்தேசித்துள்ளோம். இப்பயணத்திற்கு சுமார் 15 நாட்கள் செல்லலாமென்று எதிர்பார்க்கிறோம்.
எமது பயணத்தின் மொத்த தூரம் 500 கிலோ மீற்றருக்கும் அதிகமாகும். தற்போது கார்ப்பட் வீதி இருப்பதால் எமது பயணத்திற்கு இலகுவாக உள்ளது' என மடு தேவாலயத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சீபட் அபேரத்ன (வயது 53) என்பவர் தெரிவித்தார்.
மாட்டு வண்டிகளில் மன்னார் மடு தேவாலயத்துக்கு செல்லும் பக்தர்கள் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment