வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட ஊர்வலம் பொலிஸாரால் தடுப்பு
காணாமற்போனோர் தினமான நேற்று பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வவுனியாவில் நடத்தப்பட்டது. பொதுக் கூட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக மனு ஒன்றை கையளிக்க வவுனியா மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டமாக செல்லக்கூடாது என்று பொலிஸார் பணித்ததால் தாம் தனித் தனியே சென்று அரச செயலகத்தில் மனுவைக் கையளிக்கின்றோம் என்று கூறிய போதும் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை ஏ - 9 வீதியில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டது.
பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா பஸ் நிலையம் வரை விரட்டிச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் தமது மனுவை பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்து அவர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட ஊர்வலம் பொலிஸாரால் தடுப்பு
Reviewed by NEWMANNAR
on
August 31, 2014
Rating:

No comments:
Post a Comment