மன்னாரில் தனிநாயகம் அடிகளாரின் 34 ஆவது வருட நினைவு நிகழ்வு-Photo
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்து 34 ஆவது வருட நினைவு தினமாகிய இன்று 1ஆம் திகதி திங்கட்கிழமை(01-09-2014) மன்னாரில் அடிகளாரின் நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் பழைய நூல் நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்(அருமை),உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் மஹாதேவ சர்மா தர்மகுமார குருக்கள்,தமிழ்ச் சங்கத்தின் சிரேஸ்ர உபதலைவர் ஜனாப் மக்கள் காதர்,தமிழ்ச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட், நிர்வாக உறுப்பினர் தே.பி.சிந்தாத்துரை,வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மன்னாரில் தனிநாயகம் அடிகளாரின் 34 ஆவது வருட நினைவு நிகழ்வு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 01, 2014
Rating:
No comments:
Post a Comment