மலையகத்தில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு கீழ் மகாவலி ஆற்றினை பயன்படுத்துவோரும் அதன் கரையில் வசிப்போரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் கடும் மழைக்காரணமாக மழையகத்தின் பல பகுதிகளிலும் சிறியளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை நோட்டன் - அட்டன் பிரதான பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகாரணமாக சில மணித்தியாலங்களாக இந்த பாதையூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு பாதை திறக்கப்பட்டது.
தொடர்ந்தும் மலையகத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படும் படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மலையகத்தில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment