அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் பங்குத்தந்தையின் முன்மாதிரியான செயல்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவுகள்!

 மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புனித/மரியகொறட்டி தேவாலயத்தின் பங்குத்தந்தையான வணக்கத்திற்குரிய டெனி கலிஸ்ரஸ் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடு ஹிந்து மதத்தினர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.


கிழக்கு - மேற்கு என்று இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ள பெரியபண்டிவிரிச்சான் என்னும் கிராமத்தின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, மதங்களை கடந்து குறித்த பங்கு தந்தை பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள பொது அமைப்பின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.


குறித்த கலந்துரையாடல் பெரியபண்டிவிரிச்சான் மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் (24) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றிருந்தது.


இந்த கலந்துரையாடலில், கள்ளச்சாராயத்தை முற்றாக ஒழித்தல், மாடுகளை கட்டுப்படுத்துதல், வீதி மின் விளக்குகளை பொருத்துதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மடுவில் பங்குத்தந்தையின் முன்மாதிரியான செயல்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவுகள்! Reviewed by Vijithan on May 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.