காணமல்போனோர் தொடர்பான ஜனதிபதி அணைக்குழுவின் மூன்றாவது அமர்வு இன்று மன்னார் பிரதேச செயலகத்தில்-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் கடந்த வெள்ளிக்கிழமை 08 ஆம் திகதி முதல் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் நாள் விசாரணை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இன்று காலை தொடக்கம் காணாமல் போனோரின் உறவுகள் தங்கள் சாட்சியங்களை பதிவு செய்தனர். இதன் போது இன்று காலை குறித்த காணாமல் போனோர் தொடர்பாக விசாணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வருகை தந்திருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இலங்கையில் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை சாட்சியங்களை பதிவு செய்திருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு அதனால் பலன் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
எனவே இது அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த சாட்சியங்களை பதிவு செய்யும் முறையை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்ததுடன்.
அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார் எவ்வாறாயினும் ஆயர் அவர்கள் சாட்சியம் அழிக்க விரும்பமில்லை.
அவர் தெரிவிக்கையில் மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்த அதை ஒரு களமாக பயன்படுத்திவருகின்றனர் என தெரிவித்தார்.
நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலக பிரிவுகளில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் மட்டுமே இவ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மாந்தை மேற்கு,மன்னார்,மடு ஆகிய பிரதேசங்களில் உள்ள 45 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் உள்ள 230 பேர் இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜானதிபதியின் ஆணைக்குழுவிற்கு மெக்ஸ் வெல் பராக்கிரம பரனகம தலைமையில் மனோ ராமநாதன்,எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் மாந்தை மேற்கு பிரிவில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விசாரணைகளின் போது 65 பேர் பேரும் 2 ஆம் நாள் நேற்று சனிக்கிழமை 60 பேரும் 3 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலக பிரிவில் 60 பேரும்,4 ஆம் நாளான நாளை திங்கட்கிழமை மடு பிரதேச செயலக பிரிவில் 45 பேரும் மொத்தம் 230 பேர் இவ் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ் விசாரணைகள் முதல் மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரைக்கும்,இறுதி நாள் காலை 9 மணி தொடக்கம் 1 மணிவரையும் இவ் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் முதல் நாள் வெள்ளிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் உள்ள கட்டத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது விசாரணைக்காக 65 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் 47 பேர் மாத்திரமே ஆணைக்கு முன் வருகை தந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 5.50 மணிவரை சாட்சியமளித்தனர்.அத்துடன் 25 பேர் நேற்று விசாரணைக்காக தங்கள் விண்ணப்பத்தை புதிதாக பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் இரண்டாவது நாள் அமர்வு நேற்று சனிக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் ஆரம்பமாகியது.
இவ் விசாரணைக்காக 4 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் 36 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று 3ம் நாள் அமர்வின் போது 60 பேர் சாட்சியம் அழிக்க அழைப்பு விடுக்கப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நாளை திங்கட்கிழமை(11) இறுதி நாள் அமர்வு மடு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிபடத்தக்கது.
காணமல்போனோர் தொடர்பான ஜனதிபதி அணைக்குழுவின் மூன்றாவது அமர்வு இன்று மன்னார் பிரதேச செயலகத்தில்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:

No comments:
Post a Comment