வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு இன்று சனிக்கிழமை( (3) இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ் அச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உடனடியாக வவுனியா பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இன்று சனிக்கிழமை(3) இரவு அவரது கையடக்க தொலைபேசி 0778797783 மற்றும் 0766643844 ஆகிய இரு இலக்கங்களில் இருந்தும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு தகாத வார்த்தைப்பிரையேகங்களை பயண்படுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் வவுனியாவை சேர்ந்த ஏனைய இரு ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
தொடர்ச்சியாக குறித்த இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்தும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலே வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் அண்மையில் ஓமந்தை பிரதேசத்தில் யாழ் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டடிருந்த சமயம் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து ஊடகவியலாளாகளுக்காக குரல் கொடுத்திருந்ததுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்த நிலையிலே இவ் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு.
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment