மலையகத்தில் கடும் மழை
மலையகத்தில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையே காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனால் பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
அதிக மழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.
ஆறுகளை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் ஒன்று ஹட்டன் குடாகம பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீதியை விட்டு விலகி மதில் மேல் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலையகத்தில் கடும் மழை
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment