தமிழ்மொழி பெயர்ப்பு எதிர்பார்க்கை வினாத்தாள் எங்கே? இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை.
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வினாத்தாள் தமிழ்மொழியில் வெளியிடப்படாததேன்? இது பாரபட்சம் மட்டுமன்றி மொழியுரிமையை மீறும் செயலாகும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவதற்கு இன்னும் 16 தினங்கள் உள்ளன. அதற்கிடையில் தமிழ்மொழி மூலமான மொழிபெயர்ப்பு எதிர்பார்க்கை வினாத்தாள் தமிழ்ப்பாடசாலைகளுக்கும விநியோகிக்கப்பட துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென சங்கம் கல்வியமைச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதேவேளை மொழிபெயர்ப்பாளர்கள் இன்மையே இந்த தவறுக்குக் காரணம் என்றும் பாடசாலைகள் சிங்கள கையேட்டை பயன்படுத்தி அவற்றை மொழிபெயர்த்துக்கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விடைகள் மற்றும் 2014 இல் எதிர்பார்க்கப்படும் மாதிரி வினாக்கள் அவற்றுக்கான விடைகள் உள்ளடங்கிய தொகுப்பொன்றினை கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதி 2014 மே மாதம் முதல் பகுதியில் வெளியிட்டிருந்தது.
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வெளியீட்டின் தமிழாக்கத்தில் 2005 – 2013 வரையான வினாத்தாள்களும் விடைகளும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப்பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.
தமிழ்மொழி பெயர்ப்பு எதிர்பார்க்கை வினாத்தாள் எங்கே? இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment