மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பகுதியில் மோதல்; விசாரணைகள் இடைநிறுத்தம்
யுக்ரேனின் கிழக்கு பகுதியில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இடத்தில் ரஷ்ய ஆதரவு படையினர் மோதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் விசாரணைக்காக விஜயம் செய்துள்ள விமானத்துறை சார் நிபணர்கள் தமது கண்காணிப்பில் இருந்த கிராமம் ஒன்றை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் ரஷ்ய ஆதரவு படையினரால் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உரிய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
298 பேருடன் பயணித்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன் அதில் 220 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பகுதியில் மோதல்; விசாரணைகள் இடைநிறுத்தம்
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment