அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய பிரஜைகள் ஏழு வருடங்களுக்கு பின் எந்த நாட்டிலும் குடியேறலாம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குடிமக்கள் எந்த நாடுகளிலும் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் குடிமக்கள் ஏழு வருடங்களின் பின்னர், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம் என பிரித்தானிய துணைப் பிரதமர் நிக் கிலெக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான குடியேற்றம் குறித்த முக்கியமான விவாதம் ஒன்று நேற்று நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் நிக் கிலெக் இந்த கருத்துக்களை வெளியிட்டார். 

 ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஏழு வருடங்கள் குடியிருந்த ஒருவர், ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறவோ அல்லது தொழில் புரியவோ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நிக் கிலெக் கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ள லிபரல் டெமோகிராட்ஸ் என்ற இளைய கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரஜைகள் ஏழு வருடங்களுக்கு பின் எந்த நாட்டிலும் குடியேறலாம்! Reviewed by NEWMANNAR on August 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.