அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவது உறுதி – தமிழக மீனவர்கள்

படகுகளில் வெள்ளை கொடிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நாளை பிர​வேசிக்க இராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவர்களின் இந்தப் பயணத்தை தடுத்து நிறுத்தும் வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, இராமேஸ்வரம் மீனவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் தமிழகத்தின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்காக மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 இராமேஸ்வரம் மீனவர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் 9 ஆவது நாளாக இன்று தொடர்கின்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பாம்பன் பகுதி மீனவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் கூறினார். பாம்பன் பகுதியில் உள்ள சுமார் 800 விசை படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு, மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வுகளை பெற்றுதர இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தவறியுள்ளதாக மீனவ சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. எவ்வாறாயினும் தமது குடும்பத்தார் சகிதம் வெள்ளை கொடிகளுடன் நாளை இலங்கையை நோக்கி பயணிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென தமிழக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவது உறுதி – தமிழக மீனவர்கள் Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.