ஆசிரியையை முழந்தாளிட வைத்த சம்பவம்; சாட்சியம் சடலமாக மீட்பு
நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியையை முழந்தாளிட வைத்தமை தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியாக சாட்சியமளித்தவரின் சடலம், பாடசாலைக்கு முன்னாலிருந்து மீட்கப்பட்டது.
புஞ்யசேன பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் துசிதா ஹேரத் என்ற ஆசிரியை முழந்தாளிட வைத்தார் என்று குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியையை முழந்தாளிட வைத்த சம்பவம்; சாட்சியம் சடலமாக மீட்பு
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment