ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு டாக்டருடன் செல்கிறார் ரஜனி
அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பறக்கிறார் ரஜினிகாந்த். தன்னுடன் டாக்டர் ஒருவரையும் அழைத்து செல்கிறார்.கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா‘. இப்படத்தின் ஷூட்டிங் கர்நாடகா, ஆந்திராவில் நடந்தது. ஷூட்டிங் நடத்துவதற்கு சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
அதையெல்லாம் கடந்து ஷூட்டிங் நடந்திருக்கிறது. இறுதிகட்டமாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதையடுத்து 2 பாடல் காட்சிகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பட குழு புறப்பட உள்ளதாக தெரிகிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் பாடல் காட்சிகள் அங்கு படமாகிறது. ரஜினியின் உடல்நிலை கருதி அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.
அதையும் மீறி ரஜினி நடித்து வருகிறார். வெளிநாடு செல்வதற்கு முன் அவர் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற முடிவு செய்துள்ளார். அத்துடன் டாக்டர் ஒருவரையும் உடன் அழைத்து செல்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு டாக்டருடன் செல்கிறார் ரஜனி
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:


No comments:
Post a Comment