மீண்டும் அரசியலில் பூஜா
சினிமாவில் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் அரசியலில் குதிக்கிறார் பூஜா காந்தி.‘கொக்கி படத்தில் நடித்தவர் பூஜாகாந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்துவருகிறார். இவர் கர்நாடக அரசியலில் கடந்த ஆண்டு குதித்தார். முன்னாள் முதல்வர் குமராசாமியின் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். பிறகு அக்கட்சியிலிருந்து விலகி எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். திடீரென்று அதிலிருந்தும் விலகியவர் பி.எஸ்.ஆர்.ஸ்ரீராமுலுவின் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அக்கட்யிலிருந்து விலகியவர் மீண்டும் சினிமா பக்கம் கவனத்தை திருப்பினார்.
மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அபிநேத்ரி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு கல்பனாவின் குடும்பத்தினரும், திரைப்பட எழுத்தாளர் ஒருவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசியல் பின்பலம் இல்லாததால்தான் தன்னை பலரும் மிரட்டுகிறார்கள் என்று கருதினார். இதையடுத்து மீண்டும் அரசியல் குதிக்க முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி பூஜாகாந்தி கூறியது:
சினிமாவில் கவனத்தை திருப்பியதால் அரசியலில் ஈடுபட முடியவில்லை. அரசியலில் இருந்தபோது பெண்கள் பிரச்னையில் இருந்த சிக்கலை தீர்க்க பாடுபட்டேன். மீண்டும் அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். அரசியலில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லாததால் தடுமாறினேன். அது விரைவில் சரியாகிவிடும். எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன் என்றார்.
மீண்டும் அரசியலில் பூஜா
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:


No comments:
Post a Comment