சர்வதேச ரீதியில் பாராட்டுக்களை அள்ளும் தனுஷின் ‘காக்கா முட்டை’
டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘காக்கா முட்டை’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உலக சினிமா ஆர்வலர்கள் பலரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.
நடிகர் தனுஷும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. இரண்டு சிறுவர்கள் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. டீஸர், ட்ரெய்லர் என எதுவுமே வெளியாகவில்லை. இந்நிலையில், டொரன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6 மற்றும் 13 ஆகிய திகதிகளில் திரையிட இப்படம் தெரிவாகி இருந்தது.
இப்படத்தினை பார்த்தவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது சுருக்கமான விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.
மேலும், உலக சினிமா சார்ந்த சில ஆங்கில வலைத்தளங்கள் ‘காக்கா முட்டை’ படத்திற்கு விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
“இவர்கள் கோடீஸ்வர்கள் அல்ல, ஆனால், பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக் கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!” என்று கதாப்பாத்திரங்களை முன்வைத்து ‘காக்கா முட்டை’ படத்தை சிலாகித்திருக்கிறது ‘தி ஹொலிவுட் ரிப்போர்ட்டர்’.
டொரென்டோ திரைப்பட விழாவில் படத்தின் இயக்குனர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் கலந்து கொண்டார்கள். ‘அனேகன்’ படப் பணிகள் இருந்ததால், தனுஷ் கலந்துகொள்ளவில்லை.
சர்வதேச ரீதியில் பாராட்டுக்களை அள்ளும் தனுஷின் ‘காக்கா முட்டை’
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:


No comments:
Post a Comment