விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதாவுக்கு சமந்தா கண்டனம்.
தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டு திரையுலகம் மீது குற்றம் சொல்லக் கூடாது என்று, விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதா பாசுவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் சமந்தா.தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. தேசிய விருது வாங்கியவர். சமீபத்தில் ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் தொழிலதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். 3 மாதத்துக்கு அவரை காப்பகத்தில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய விருது வாங்கிய நடிகை விபசாரத்தில் ஈடுபட்டு கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணையின் போது, சுவேதா ‘என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
பண நெருக்கடி இருந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டேன். என்னைப்போல் பல ஹீரோயின்கள் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்‘ என வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், சுவேதாவின் கருத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டாப் நடிகைகள் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘என்ன வேலை செய்கிறோம் என்பது அந்தந்த நடிகைகளின் விருப்பம்தான். சுவேதா கூறியதுபோல் உலகில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது.
இதில் எந்த பாதையை தேர்வு செய்கிறோம் என்பது அவரவர் விருப்பம்தான். சுவேதா பாசு தவறான பாதையை தேர்வு செய்திருக்கிறார். திரையுலகை பொறுத்த வரை, அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் ஹீரோயின்களுக்கு பாதுகாப்பான இடம். ஹீரோயின்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கூற முடியாது‘ என்றார்.
விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதாவுக்கு சமந்தா கண்டனம்.
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:


No comments:
Post a Comment