படத்துக்காக பட்டினி கிடந்த ஹீரோயின்
கடத்தல் காட்சிக்காக 3 நாள் பட்டினி கிடந்தார் ஹீரோயின்.ஒரு சில ஹீரோக்கள் கதாபாத்திரத்துக்காக உடல் மெலிவது, உடற்கட்டை ஏற்றுவது என்று ஹோம் ஒர்க் செய்கின்றனர். ஒன்றிரண்டு ஹீரோயின்களும் இதுபோல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ‘அம்பேல் ஜூட் படத்தில் நடிக்கும் அக்ஷிதாவும் இதுபோல் உடலை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார்.
இது பற்றி இயக்குனர் டி.எஸ்.திவாகர் கூறியது:சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு சீர்திருத்த பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் சிலர் நல்வாழ்க்கை தொடங்குகின்றனர். அவர்களை மீண்டும் ஒரு கும்பல் சமூகத்துக்கு புறம்பான வேலையில் ஈடுபடுத்துகிறது. இதனால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படு கிறார்கள் என்பதுதான் கதை. லிபின், வினோ, கமல், ஆண்டனி ஹீரோக்கள். அக்ஷிதா ஹீரோயின். இவர் மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்திருக்கிறார்.
கடத்தல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக சோர்வாக இருக்க வேண்டும் என்று கூறியபோது மூன்று நாட்கள் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகி தத்ரூபமாக நடித்தார். சவுந்தர்யா, பாண்டு, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனந்த் மேனன் ஒளிப்பதிவு. மணி, மணிவேல், மணிரூடா தயாரிக்கின்றனர்.
படத்துக்காக பட்டினி கிடந்த ஹீரோயின்
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:

No comments:
Post a Comment