அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – தேசிய சுதந்திர முன்னணி
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இதனைக் கூறினார்.
பொருளாதாரம் அந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர். எனினும் என்ன நடந்துள்ளது என்பது எமக்குப் புரிவதில்லை. மிதக்கும் கொழும்பில் உள்ள கடைகளில் ஒரு அப்பம் 200 ரூபாவாகும். 200 ரூபா கொடுத்து அப்பம் சாப்பிடுவோர் இந்த நாட்டில் உள்ளனர். 200 ரூபாவிற்கு அப்பம் சாப்பிடுவோர் இங்கு உள்ளபோது பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த பகுதி மக்களுக்கு ஒருவேளை சாப்பிடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் விடயத்தை மேன்பவர் என்ற நிறுவனமே செய்கிறது. குறிப்பாக இலங்கை மின்சார சபையில் இதனை அதிகளவில் காண முடிகின்றது. அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதனாலே நாம் இதனைக் கூறுகின்றோம்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – தேசிய சுதந்திர முன்னணி
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:

No comments:
Post a Comment