அண்மைய செய்திகள்

recent
-

பெண்களின் அங்கங்களை படம்பிடித்த சாரதி கைது

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். 

 சந்தேகநபர் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நின்று, அங்கு நின்றிருந்த பெண்களின் அங்கங்களை தனது அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள், சந்தேகநபரை பிடித்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உபபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 தொடர்ந்து, சந்தேகநபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்த போது, சந்தேகநபரது அலைபேசியில் பெண்களின் அங்கங்களின் புகைப்படங்கள் பல இருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள். 

 மேற்படி சந்தேகநபர் கடந்த ஜூலை மாதம் மாநகர ஆணையாளருடைய வாகனத்தை மதுபோதையில் செலுத்தி சென்று, அராலி சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களின் அங்கங்களை படம்பிடித்த சாரதி கைது Reviewed by NEWMANNAR on September 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.