அண்மைய செய்திகள்

recent
-

கைவிடப்பட்ட பையில் வெடிபொருள்; தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையம்

லண்டன் அருகே அமைந்துள்ள விமானநிலையத்தில் பையொன்றில் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பான முறையில் அந்த வெடிபொருள் செயலிழக்கச் செய்யப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் உள்ளது லுடா என்ற விமான நிலையம். பெரும்பாலும், சிறிய ரக விமானங்களே வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் பையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் எனப் பரவிய தகவலால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தின் உள்ளே இருந்த சுமார் 1600 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்களும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானார்கள். விமானநிலையத்தில் நிலவிய பதற்றம் காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டன. 12 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைக் குழுவினர் மற்றும் இராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் இந்த மர்மப் பையை எடுத்துச் சென்று அதை வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்தனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக பல மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம், பலத்த சோதனைக்குப் பின் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பாரிய உயிர்ச்சேதம் மற்றும் பொருட்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கைவிடப்பட்ட பையில் வெடிபொருள்; தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையம் Reviewed by NEWMANNAR on September 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.