அண்மைய செய்திகள்

recent
-

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது கையிருப்புகளை வெளிப்படுத்த தவறினால், அவர்களின் கையிருப்புகள் அரசுடமையாக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று கையிருப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இது தொடர்பான அறிவித்தல் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், நெல் மற்றும் அரிசி சேகரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலுக்கு புறம்பாக செயற்படுபவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

 நுகர்வோர் அதிகாரசபையின் அறிவித்தலின்படி இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கையிருப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலையில் செயற்கை உயர்வுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை Reviewed by NEWMANNAR on September 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.