நீர் வெறுப்பு நோயை கட்டுப்படுத்த வவுனியாவில் நாய்களுக்கு தடுப்பூசி
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், நாய்களுக்கு நீர் வெறுப்பு நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
வவுனியாவின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் செயற்பாட்டில், முதற்கட்டமாக வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை, வவுனியா வடக்கிலுள்ள வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டன.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, வீதியோர நாய்களுக்கும் இத் தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர் வெறுப்பு நோயை கட்டுப்படுத்த வவுனியாவில் நாய்களுக்கு தடுப்பூசி
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment