முழங்காவில் கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கான கோழிக்குஞ்சு தயாரிக்கும் நிலையம்
வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முழங்காவில் கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழிக்குஞ்சு தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் முழங்காவில் கிருஷ்ணர் கோவில் வீதியில் அமைந்துள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம்,அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிப்படுத்தினார்.
கிராம அபிவிருத்தி தொடர்பான இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அமைச்சர் எனற வகையில் கௌரவ அமைச்சர் பா. டெனிஸ்வாரன் நன்றிகளை தெரிவிக்கின்றார்.
முழங்காவில் கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கான கோழிக்குஞ்சு தயாரிக்கும் நிலையம்
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:


.jpg)



No comments:
Post a Comment