முசலி வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்.-Photo
தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நேற்று(11) வியாழக்கிழமை முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முசலி வைத்திய அதிகாரி எம்.ஏ.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீடுகள் சுகாதார அதிகாரிகள் குழுவினரினால் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது வீடுகள்,மதஸ்தலங்கள்,பாடசாலைகள்,படை முகாம்கள் ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகளும் இடம் பெற்றது.
குறித்த ஒவ்வொரு இடங் களுக்கும் முசலி வைத்திய அதிகாரி எம்.ஏ.ஒஸ்மன் சாள்ஸ் தலமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனை நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விடங்களில் நுளம்புகள் பெருகாதவகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முசலி வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்.-Photo
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:





No comments:
Post a Comment