அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக மாடுகளை லொறிகளில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர்கள் கைது

சட்டவிரோதமாக 33 மாடுகளை லொறிகளில் ஏற்றிச் சென்ற நான்கு சந்தேகநபர்களை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சியில் இருந்து ராகமை பகுதிக்கு இரண்டு லொறிகளில் சந்தேகநபர்கள் இந்த மாடுகளை ஏற்றிச்சென்றுகொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கிடைத்த தகவலுக்கு அமைய இரண்டு லொறிகளை சோதனைக்குட்படுத்தியபோது ஒரு லொறியிலிருந்து 17 மாடுகளும் மற்றைய லொறிலிருந்து 16 மாடுகளையும் மீட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, பரலண்கட்டுவ பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெட்டி லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட மரக்குற்றிகளையும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக மாடுகளை லொறிகளில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர்கள் கைது Reviewed by NEWMANNAR on September 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.