அண்மைய செய்திகள்

recent
-

அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

iPhone 6′ மற்றும் ‘iPhone 6+  எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மொடல்களை விட மெலிதாக உள்ளது.

இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், கைகட்டிகாரமும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டொலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டொலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டொலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டொலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் Reviewed by NEWMANNAR on September 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.