அண்மைய செய்திகள்

recent
-

நெடுந்தீவில் இருந்து குதிரைகள் கடத்தப்படுகின்றன ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

நெடுந்தீவில் இருந்த ஆறு குதிரைகள் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

 நெடுந்தீவில் இருந்து குதிரைகள் கடத்தப்படுவதாக தம்மிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார் இந்த முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நெடுந்தீவுக்கு நேற்று சென்றிருந்தார்கள். நெடுந்தீவில் மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பிரதேச சபை அதிகாரிகள், கடற்படைமுகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரட்ன மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 இந்த விடயம் தொடர்பாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் நியூஸ் பெர்ஸ்ட் வினவியது. வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன் நான்கு குதிரைகள் நெடுந்தீவில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நெடுந்தீவில் இருந்து குதிரைகள் கடத்தப்படுகின்றன ஐங்கரநேசன் குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on September 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.