அண்மைய செய்திகள்

recent
-

பூமியை நோக்கி வரும் வலுவான காந்தப் புயல்

ஜனவரி 22, 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த கோப்புப் படத்தில் காண்பது சூரியனில் உருவான புயல். தற்போது மணிக்கு 2.5 மில்லியன் வேகத்தில் மற்றொரு காந்தப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் காந்தப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இன்று இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு காந்தப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் கூறுகிறார்.

இது தொடர்பான செய்மதி தரவுகள் கிடைத்துள்ளன. அதன் வலுவான துகள், நெருப்பு மயமாக பூமிக்கு மேலேயோ, வடக்குப் பகுதியிலோ செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் மின் விநியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த காந்தப் புயல் மின்சாரக்கட்டமைப்பை முழுமையாக சேதம் செய்து விடக்கூடியதல்ல, இதனால் செய்மதிகள், வானலைகள் சிறிய அளவு பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் வேகத்தில் இது வந்து கொண்டிருக்கிறது என்பதால் இன்று பூமிக்கு அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தப் புயல் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவதனால் இவை பொதுவாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல என தெரிவிக்கப்பட்டுகின்றது.

ஆனால் இந்த முறை, “சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை நம்மை நோக்கி நேராக இருக்கிறது. இதன் அதி ஆற்றல் மிக்க மற்றும் காந்தமாக்கச் சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம். இதனால் மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம்” என்கிறார் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர்.
பூமியை நோக்கி வரும் வலுவான காந்தப் புயல் Reviewed by NEWMANNAR on September 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.