ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டி; அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை தகுதி
ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் தோற்கடிக்கப்படாத அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் பி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியும் மலேஷிய அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின் முதல் கால் பகுதியில் 17 – 14 என்ற கோல்கள் கணக்கில் மலேஷிய அணி முன்னிலை பெற்றிருந்தது.
எனினும் இரண்டாவது கால்பாதியில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி 33 – 31 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.
மூன்றாவது கால் பகுதியில் 49 – 48 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்ற இலங்கை அணி போட்டியில் இறுதியில் 66 – 62 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.
இதன்பிரகாரம் அரையிறுதிப் போட்டியில் கொங்ஹொங் அணியுடன் இலங்கை அணி நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் மலேஷிய அணிகள் விளையாடவுள்ளன.
ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டி; அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை தகுதி
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:


No comments:
Post a Comment