துப்பாக்கி முனையில் காதல் கோரிக்கை; சந்தேகநபர் கைது
துப்பாக்கியைக் காட்டி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முற்பட்ட ஒருவர் கோட்டே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டே பகுதியால் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் மற்றுமொருவருடன் வருகைதந்த சந்தேகநபர் துப்பாக்கியைக் காட்டி தன்னைக் காதலிக்குமாறு யுவதியை கோரியுள்ளார்.
யுவதியின் பயணப் பொதி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை சந்தேகநபர் அபகரித்துச் சென்றதாகவும், பின்னர் அவற்றை ஒப்படைத்துவிட்டு தனது யோசனைக்கு யுவதியை இணங்கச் செய்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபருடன் மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படும் நபர் போதைப்பொருளுக்கு அடியானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் காதல் கோரிக்கை; சந்தேகநபர் கைது
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:

No comments:
Post a Comment